Monday, 17 August 2015

Anbulla Amma

நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது .தூக்கமில்லாத 25நாட்கள் துக்கம்,கவலை ,ஆதங்கம் ,இயலாமை என, பலவித மனநிலையிலும் ,எப்படியேனும் நல்லபடியாக வீடு திரும்பி விடுவீர்கள் என்று ஒரு தீர்க்கமான நம்பிக்கை .என் அம்மா மறைந்த துக்கம் ஆறுவதற்குள் ,நீங்களும் அதே போல அதே ஆஸ்பத்திரியில் ,நினைவுகள் அல்லாட படுத்திருப்பீர்கள் என்று நம்பத்தான் முடியவில்லை .

பல வருஷங்களாக அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் -"நீ காலையில் காப்பியுடன் வரும்போது ,நான் தூக்கத்திலேயே போயிருக்கவேண்டும் .நான் கடவுளை தினந்தோறும் வேண்டுவது இதுதான் .உனக்கு கஷ்டமே கொடுக்கக்கூடாது".நீங்கள் மனதார விரும்பியது எப்படி பொய்த்துவிட்டது ?இவ்வளவு வருடம் படாத அவஸ்தையை 25நாட்களில் அனுபவித்து விட்டீர்கள் .ஒரு அதிகாலை நேரம் ,உங்கள் குழந்தைகள் சூழ்ந்திருக்க ,நீங்கள் மெதுவாக அடுத்த பயணத்தை தொடங்கிய போது ,மனது அதை ஏற்க தயங்கியது .

ஒரு வருஷம் ஓடிவிட்டது .மாமியார் என்ற உறவு ஏதோ ஒரு கால கட்டத்தில் அம்மாவாகி போனது .40வருஷ உறவல்லவா ?உங்களிடம் பெற்றதும் கற்றதும் பல,பல ,விஷயங்கள் .எங்களை சுற்றி நீங்கள் என்றென்றும் இருப்பது போல ஒரு பிரமை இருந்து கொண்டேயிருக்கிறது .

5 comments:

  1. You said it all,Manni. Same emotions for us as well. I cannot beleive that it is a year. Manasu ennavo pol iruku. ! How do we thank you and Anna! Only prayers and Amma's blessings! Luv you very much.
    Kamal/Jayram

    ReplyDelete
  2. Yes Manni. Thousands of heartfelt thanks to you and Mani for the care you provided to her over the years lovingly, despite many many challenges. Care that we all should have provided or wanted to but didn't/couldn't :( :(

    Very beautifully written. I am amazed to see Kailasa Mama's talent being expressed so wonderfully through you. Thank you for this.

    Love Nithu

    ReplyDelete
  3. Picture in the heart can only take the form of words and your pictures will move anyone. The love and care you had for mother (to our dear ones) and mamiar to us are well said. You surely have a great talent.

    I am sure Swami will bless you for a healthy and prosperous years ahead.
    love
    Athimber

    ReplyDelete
  4. மன்னி வழக்கம் போல் உங்கள் உணர்வு பூர்வமான ஒன்றை உங்கள் எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள் . அம்மாவின் நினைவுகள் சந்தோஷமாகத்தான் வருகின்றன, இதைப் படிக்கும் போதும். அம்மாவின் காலம் முடிந்து விட்டாலும் நீங்கள் அதை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் .

    ReplyDelete
  5. Thank you Kamal, Nithu, Athimber, Jairam. I expressed what I felt. Thanks for the encouragement

    ReplyDelete