நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது .தூக்கமில்லாத 25நாட்கள் துக்கம்,கவலை ,ஆதங்கம் ,இயலாமை என, பலவித மனநிலையிலும் ,எப்படியேனும் நல்லபடியாக வீடு திரும்பி விடுவீர்கள் என்று ஒரு தீர்க்கமான நம்பிக்கை .என் அம்மா மறைந்த துக்கம் ஆறுவதற்குள் ,நீங்களும் அதே போல அதே ஆஸ்பத்திரியில் ,நினைவுகள் அல்லாட படுத்திருப்பீர்கள் என்று நம்பத்தான் முடியவில்லை .
பல வருஷங்களாக அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் -"நீ காலையில் காப்பியுடன் வரும்போது ,நான் தூக்கத்திலேயே போயிருக்கவேண்டும் .நான் கடவுளை தினந்தோறும் வேண்டுவது இதுதான் .உனக்கு கஷ்டமே கொடுக்கக்கூடாது".நீங்கள் மனதார விரும்பியது எப்படி பொய்த்துவிட்டது ?இவ்வளவு வருடம் படாத அவஸ்தையை 25நாட்களில் அனுபவித்து விட்டீர்கள் .ஒரு அதிகாலை நேரம் ,உங்கள் குழந்தைகள் சூழ்ந்திருக்க ,நீங்கள் மெதுவாக அடுத்த பயணத்தை தொடங்கிய போது ,மனது அதை ஏற்க தயங்கியது .
ஒரு வருஷம் ஓடிவிட்டது .மாமியார் என்ற உறவு ஏதோ ஒரு கால கட்டத்தில் அம்மாவாகி போனது .40வருஷ உறவல்லவா ?உங்களிடம் பெற்றதும் கற்றதும் பல,பல ,விஷயங்கள் .எங்களை சுற்றி நீங்கள் என்றென்றும் இருப்பது போல ஒரு பிரமை இருந்து கொண்டேயிருக்கிறது .