Sunday, 19 May 2013

Kaalai Nera Amarkkalam

காலை 7 மணிக்கு வாக்கிங் முடிந்து வீட்டிற்குள் நுழையும்போது "அது "என் கண்ணில் பட்டது .இன்று எப்படியாவது இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும்,ஒரு கை பார்த்து விடலாம் என்று தீர்மானித்தேன் .துடைப்பமும் கையுமாக,இங்கேயும் அங்கேயும் பெருக்கி  தேடினேன்.விளக்கு போட்டு ,நாற்காலிகளை நகர்த்தும் அரவம் கேட்டு ,என் மாமியார் தன் அறையிலிருந்து வெளியே வந்தார் .என்னை பார்த்து " இன்று லக்ஷ்மி வரமாட்டாளா ?" என்றார் (லக்ஷ்மி எங்கள் வீட்டில் வேலை செய்பவள் ). நான் பதில் அளிக்கவில்லை ."நீ அவளுக்கு ரொம்ப இடம் கொடுத்து விட்டாய் .சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்தால் எப்படி ?"

இதற்குள் நோயாளியான  என் அம்மாவின் அறையில் இருந்து அவரை பார்த்துகொள்ளும் பெண் வெளியே வந்து இங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .எனக்கு எரிச்சலாக வந்தது .ஆனால் என் வேலையில் கவனமாக இருந்தேன் .உள்ளிருந்து என் அம்மா ஈனஸ்வரத்தில் "இவர்கள் எல்லோரும் அப்படித்தான் மாமி,அடிக்கடி லீவு எடுத்து விடுவார்கள் "என்று மாமியாருக்கு பதில் அளித்தார் .90 வயதான என் மாமியாருக்கு காது கேட்காவிட்டாலும், மெதுவாக அம்மா பேசுவது எப்படியோ கேட்டுவிடும் !

மாமியார் -  லக்ஷ்மி வராவிட்டால் யார் என்னை குளிப்பாட்டுவார்கள் ?

அம்மா  -  கொஞ்ச நேரம் காத்திருங்கள் .

மாமியார் -  (என்னை பார்த்து )நீ ஒன்றும் பெருக்காதே .குப்பை இருந்தால் இருக்கட்டும் .நம் வீடு ரொம்ப நீட்டாக தான் இருக்கிறது .

அம்மா  - ஒரு நாள் பெருக்காவிட்டால் ஒன்றும் ஆகி விடாது

மாமியார் -  போன் பண்ணி பார்க்கிறாயா ?எதற்கும் இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் .
(உங்களுக்கு குளிக்க என்ன அவசரம் என்று முணுமுணுத்தேன். )

மாமியார் நாற்காலியில் உட்கார்ந்து என்னையே பார்த்து கொண்டிருந்தார்.எனக்கு ஆத்திரமாக வந்தது .இவர்கள் என்னையே கவனித்துக்கொண்டு ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ன விஷயம் என்று தெரியாமலேயே .

திடீரென்று என் மாமியார் "எதாவது தொலைந்து விட்டதா? "என்றார் .
அம்மா- "மாத்திரை கீழே விழுந்திருக்கும் .மேஜைக்கு அடியில் உருண்டிருக்கும் .கார்த்திகா ,நீ கொஞ்சம் குனிந்து பாரு" .
அந்த பெண் குனிந்து தேட ஆரம்பித்தாள்.மாமியாரும் தன் காலடியில் தேடினார் .
எனக்கு அழுவதா ,சிரிப்பதா என்று தெரியவில்லை .ஏதோ யூகத்தில் ஆளாளுக்கு பேசிக்கொண்டே போகிறார்கள் .அக்னி நக்ஷத்திர சூட்டில்,வியர்த்து விறுவிறுத்து நான்,எரிச்சல் தாளாமல் உரத்த குரலில் சொன்னேன்,"பல்லி அம்மா,பல்லி !!நான் பல்லியை தேடிக்கொண்டிருக்கிறேன் .நாலு நாட்களாக அது என்னுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது.இன்று எப்படியாவது அதை துரத்திவிடவேண்டும் என்றால் நீங்களெல்லாம் ஏதேதோ பேசி எரிச்சல் மூட்டுகிறீர்கள்.பாருங்கள்.இந்த அமர்க்களத்தில் அது பயந்துகொண்டு மீண்டும் டிவி பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டது."

எனக்கு அழுகையே வந்து விட்டது.பல்லி என்றாலே எனக்கு அலர்ஜி.பல்லி துரத்திய அனுபவம் நிறைய உண்டு எனக்கு.ஆனால் இந்த குட்டி பல்லி என்னை இப்படி படாத பாடு படுத்துகிறதே !பார்க்கலாம் - நாளையாவது நான் வெற்றி அடையமாட்டேனா?       






Tuesday, 14 May 2013

Oru pudhiya anubavam

ஒருநாள் எங்கள் நண்பரின் சிபாரிசின் பெயரில் தைராய்டு டாக்டரை பார்க்கசென்றோம் .தி.நகரில் பலரும் அறிந்த கை ராசியான டாக்டர் அவர் .சில சந்து பொந்துக்களை கடந்து அந்த க்ளினிக்கை அடைந்தோம்.ஒரு மிக மிக பழைய வீட்டின் இரண்டு அறைகளை அவர் கிளினிக் ஆக மாற்றி இருந்தார்.வாசலில் பல ஜோடி செருப்புகள்.செருப்பை கழட்டி உள்ளே நுழைந்தால்,இரண்டு பெஞ்சில் சிலர் அமர்ந்து இருந்தனர் .மிக சிறிய அந்த அறையில் டாக்டரின் அறை வரை போகமட்டும் சிறிய இடைவெளி.

எனக்கு களைப்பாக இருந்ததால் இரண்டு பேர் நடுவில் கிடைத்த துளி இடத்தில் அமர்ந்தேன் .இதனால் ஏற்கனவே அமர்ந்தவர்கள் கொஞ்சம் நகர,
கடைசியில் இருந்தவரை பெஞ்சின் விளிம்பிற்கு தள்ளி,அவர் கீழே விழவிருந்தார். வத்தலாக இருந்த அந்த ஆசாமி, அசௌகரியம் தாளாமல் எழுந்து நின்றே விட்டார்!எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை,சரி, புழுக்கமாக உள்ளதே,ஏன் யாரும் மின்விசிறியை போடவில்லை,ஒரு வேளை  சோம்பேறித்தனமோ என்று உயரத்தில் உளள ஸ்விட்சை தட்ட  கை நீட்டினேன்.ஒரு பெரிய ஒட்டை என்னை பார்த்து சிரித்தது.இங்கு வருபவர்களுக்கு இது பழக்கம் போலும்! யாரும் சட்டை செய்யவில்லை.நம் தலைவிதி என்று உட்கார்ந்தேன்.

உள்ளே பேச்சுக்குரல்.டாக்டர் ஒரு நோயாளியை பார்த்துக்கொண்டு இருந்தார்.அப்போது நுழைந்தாள் தாடகை போல ஒருத்தி!சிவப்பு புடவை,பெரிய குங்குமம்,வாயில் வெற்றிலைப்பாக்கு,கையில் துடைப்பம்.இடுப்பில் கை வைத்து எல்லாரையும் முறைத்தாள்."யாரும் உள்ளே போகக்கூடாது.நான் பெருக்கப்போகிறேன்" என்று பிரம்மாண்டமான ஹாலில் இருப்பது போல் அறிவித்தாள்.கதவு திறந்தது.மருந்து சீட்டுடன் சோகமாக ஒருவர் வெளியே வந்தார்.

தாடகை உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டாள்.உள்ளே டாக்டரிடம் ஒரே பேச்சு.எனக்கு ஒரே கோபம்.இந்த சிறிய இடத்தை சுத்தம் செய்ய இவள் ஏன் காலையிலேயே வரக்கூடாது?நோயாளிகள் இருக்கும்போது ஏன் அவள் பெருக்கவேண்டும் ? டாக்டர் ஒன்றும் சொல்ல மாட்டாரோ?(ஒரு வேளை அவர் எதாவது சொன்னால் அவள் வேலையை விட்டு போய் விடுவாள் என்கிற பயமோ என்னவோ!).என்னை சுற்றி பார்த்தேன்.ஒரே அழுக்குதான்.ஜன்னல்களில் ஒட்டடை,பெஞ்ச் அடியில் காலி பாட்டில்கள்,பழைய பிளாஸ்டிக் சாமான்கள்.இவள் வேலை செய்யாமல்   இருப்பதே   மேல் என்று நினைத்தேன்.இங்கே உட்கார்ந்தால் மேலும் வியாதி தொற்றிக்கொள்ளுமோ என்ற பயத்தில்,திரும்பி போய் விடுவதே மேல்  என்று என் கணவரை பார்த்தேன்.அவர் வாசல் ஓரமாக நின்றுகொண்டு வழக்கம் போல் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.படிக்க ஆரம்பித்தால் உலகமே மறந்துவிடும் அவருக்கு.கண் ஜாடை காட்டலாம் என்றால் மனிதர் நம் பக்கமே திரும்ப மாட்டார்!புரியவும் புரியாது.

எல்லோரும் கதவையே பார்த்துக்கொண்டிருக்க திடீரென்று கதவு திறந்தது.தாடகை துடைப்பமும் பக்கெட்டுமாக வெளியே வந்தாள்."ஈரமாக இருக்கிறது.5 நிமிடம் கழித்து உள்ளே போங்கள்" என்றாள்.ஆனால் அவளை சட்டை செய்யாமல் அடுத்த நபர் உள்ளே போய் விட்டார்.அரை மணி கழித்து என்னுடைய முறை வந்தபோது நாங்கள் உள்ளே சென்றோம்.எனக்கு உலகமே வெறுத்துவிட்டது!எங்கே வந்து மாட்டிக்கொண்டோம்!டாக்டருக்கு ஒரு மேஜை,ஒரு நாற்காலி.நோயாளிக்கு ஒரு ஸ்டூல்.கூட வருபவர் நிற்க வேண்டும். முதலில் டாக்டர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க ஒரு நொடி வேண்டி இருந்தது.அந்த அறையில் அவ்வளவு பெரிய அட்டை பெட்டிகள்.எல்லாம் மருந்து சாம்பிள் போலும்!கூடவே பல காலி பெட்டிகள் வேறு. அதற்கு நடுவில் டாக்டர் காணாமல் போயிருந்தார்.

டாக்டரை பார்த்தவுடன் ஆச்சரியமாக இருந்தது.நடு வயது.மிக ஸ்மார்டாக உடை உடுத்தி, அழகாக இருந்தார்.அந்த சூழ்நிலைக்கு அவர் பொருந்தவில்லை.மிக சன்னமான குரலில் அவர் பேசியதால் கவனமாக காதை தீட்டிக்கொண்டு கேட்க வேண்டி இருந்தது.நன்றாக பரிசோதித்து ,கேட்ட கேள்விக்கெல்லாம் புரியும்படியாக பதில் அளித்து, என்னை கவர்ந்து தான் விட்டார்.இவ்வளவு அனுபவம் உள்ளவர் ஏன் இப்படி? புரியவில்லை.

வாசலில் தாடகை நின்று கொண்டிருந்தாள்.எனக்கு ஒரு நிமிடம் தொடப்பத்தை எடுத்து நாமே அந்த இடத்தை சுத்தம் செய்யலாம் என்று தோன்றியது.மனதார அவளை சாட்டையால் அடித்து ஆறுதல் அடைந்தேன்.

மனிதர்கள் பலவிதம்.அதில் அதிகம் பீஸ் வாங்காத அனுபவம் மிக்க இந்த டாக்டர் ஒரு விதம் !!     









Sunday, 12 May 2013

The American vacation

This was our second trip to the US.Four years ago, we travelled to the west coast to California. This time it was to the east coast to Washington.The nature of our visit was to assist our son and daughter in law who  just had a baby girl.Several months of planning,organizing,shopping, packing and attending to odd jobs till the last minute, were carried out in joyful anticipation of the days to come.
After sweating it out in Chennai airport, Frankfurt was the perfect haven to relax a full three hours,before boarding the onward flight to our destination.We were awed by the vast expanse of the airport, the long convenient walkalators, the huge lounges and the friendly Germans!   Dulles airport welcomed us with cool winds  and pleasant weather.
Herndon- a suburb in the Virginia-Washington border is a beautiful place.This was a much needed vacation for us  and we spent our time mostly in the company of our new grandchild. She was just about three weeks when we arrived and the next few months were spent observing her day to day progress.Truly the most rewarding in life, spending time with your grandchild!
We are regular walkers and it was a pleasure to walk there.Who would like to miss the opportunity of walking in clean,pollution free atmosphere with side walks unlike the crowded, footpath deprived and potholed roads of Chennai? We walked miles and miles, adding layers to our winter clothing in accordance to the day's temperature.We would venture out any time of the day on our walking spree, be it 5 degrees or -2 degrees C  .We just loved it.
The flurries and the snow fall excited us. It was the first time we were experiencing the snow fall.I used to wonder at the absence of lightning and thunder when it rained!Not much sight-seeing this time,but the Great falls near the capital is surely a must watch place.It is an astounding view of the Potomac river falling with great force and speed over steep rocks and flowing through a narrow gorge.It is a picnic spot and tourists throng the place.we visited quite a few museums which were too huge and each required many hours to completely go through them.
Avid readers, both of us were exhilarated by the splendid library, so neat and orderly.Finding books with large print for the seniors amazed us .We read a lot of books and ofcourse watched  many quality movies and documentaries on Netflix which was a treat.Going to Giant,Shoppers and the Indian store was a satisfying chore..And in between all these activities I did not forget to cook!
Our three week vacation squeezed in between to Canada was a bonanza.But overall the thrill of watching our grand child as she pushed five months was pure bliss. We do miss her back in Chennai.Living in harmony with our son, daughter in law and grand child is a blessing and a joy for ever.This was a very pleasant trip for both of us and we lived every moment of it.

































Thursday, 2 May 2013

Unlucky 13

A week before our departure to the US, a friend called up to wish us bon voyage and was quite upset to learn that we had booked our return tickets for the 13 th of April.She being superstitious, argued with me that 13 is a number that brings misfortune."You are there for 4 months,why can't you leave a day earlier or a day later? What is the compulsion to leave on the 13th?This year is going to be very trying, being 2013."She was very concerned.This was the most convenient date for us and it being 13th did not matter. It was absurd to even think that way.

Many people believe in the luck or ill luck bestowed by numbers. A friend bought a beautiful seaside apartment on the 14th floor and happily remarked that the building did not have the 13th floor.In fact she was above the 12th floor which actually was the 13th but was numbered 14.Even the builders don't want to accept the existence of the 13th floor. For us beliefs like Friday the 13th, the devil's number etc meant nothing.

Landing in Chennai our misery began right from the start.From blocked pipes to the battery rundown car,we seemed to have trouble with everything.The washing machine, the water filter, the AC, the inverter (a life saver during the powers cuts), all needed attention.Endless complaint calls and endless hours of waiting for the persons to come and attend to the problems took away all our energy.And as if the jet lag wasn't enough I came down with a bout of viral fever.Anticipating similar problems, we had made all prior arrangements but nothing seemed to have helped. We were tired and frustrated.

Well - -- was 13 the culprit?My mind was confused and I thought it did have something to do with the state of affairs.My friend's superstitious affliction with the number brushed on to me too.No wonder people believed in it. At last, after two weeks we settled down to our usual routine. Though I still don't believe in number 13, I added a new word to my vocabulary- TRISKAIDEKAPHOBIA- it means fear of 13.
  

Wednesday, 1 May 2013

Back to the Pavilion

After 4 months of bliss - the weather,the silence,the pollution free existence, we have come back to reality.Hot, overcrowded, noisy and dusty Chennai  airport welcomed us into the present. We fitted easily into our routine life as if we had never left it in the first place ! After all this is the place where we belong.Ofcourse, we miss all the comforts of being in the US, but that was only a temporary phase.This is home  sweet home and we are back with all the paraphernalia that surround us. We will spend the rest of our time basking in the happy memories and the good times we spent with the family.Let us wait and see. May be many more such months await us in future. Till then, back to the familiar chaos and irritants of our busy hectic schedule! .