1964 மே 27 - மறக்கமுடியாத நாள் .தாத்தா, ரேடியோ அருகில் உட்கார்ந்து,ஆங்கில செய்திகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்.கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.அவர் மிகவும் நேசித்த,மதிப்பிற்குரிய தலைவர் திடீரென்று காலமாகிவிட்டார்.அன்று காலையில் டெல்லியில், பிரதமர் பண்டிட் ஜவாஹர்லால் நேரு மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி ஒலிபரப்பாகி கொண்டிருந்தது.
நம்பவே முடியவில்லை.நாங்கள் அப்போது டெஹ்ராடூனில் இருந்தோம்.எனக்கு அப்போது பத்து வயது இருக்கும்.அதற்கு முதல் நாள் மாலையில் தான் நான் தாத்தாவுடன் எங்கோ சென்றுகொண்டிருந்தேன்.சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் இன்று கூட அன்று நடந்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.அழகான,பச்சை பசேல் என்ற ஏதோ ஒரு சாலையில், நானும் தாத்தாவும் நடந்துகொண்டிருந்தோம்.இப்போதுபோல் சாலையில் ஒரு நெரிசலும் இல்லை.ஜனங்களின் நடமாட்டமும் அதிகம் இல்லை.அப்போது ஒரு ஜீப்பில் ஐந்தாறு போலீஸ்காரர்கள் வந்து இறங்கினார்கள்.சாலையில் நடப்பவர்களை ஒரு ஓரமாக நிற்க சொன்னார்கள்.அங்கும் இங்கும் செல்லும் ஓரிரண்டு வாகனங்களையும் ஓரங்கட்டினார்கள்.காரணம், நமது பிரதமர் ஜவாஹர்லால் நேரு அந்த வழியாக செல்வதால் இந்த ஏற்பாடு.தாத்தா மிகவும் ஆவலுடன் என் கையை பிடித்துக்கொண்டு நடைபாதையில் நின்றுகொண்டிருந்தார் . "நன்றாக பார்.பண்டிட்ஜி வரப்போகிறார்"என்றார். பத்து நிமிடங்களில் ஒரு சிறிய கூட்டமே எங்கள் பக்கம் சேர்ந்து விட்டது. பெரியவர்கள்,குழந்தைகள் என்று ஒரே சலசலப்பு.
நிதானமாக நாலைந்து வண்டிகள் எங்களை தாண்டி சென்றன.தூரத்தில் வந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய படகு போன்ற காரை எல்லோரும் ஆவலாக எதிர்நோக்கினர்.ஜனங்கள் குழுமி இருப்பதை பார்த்து , மெதுவாக அந்த கார் நாங்கள் இருந்த இடத்தின் முன் நின்றது. கதவை இருவர் திறக்க, மெதுவாக இறங்கினார் நேருஜி.அவரை பார்த்து எல்லோரும் பரவசமடைந்தனர். என்னால் நம்பவே முடியவில்லை.போட்டோவில் பார்த்தது போலவே வெள்ளை sherwani, அதில் ஒரு அழகிய சிவப்பு ரோஜா,வெள்ளை தொப்பி !!.தாத்தா அவரை பற்றி எவ்வளவு கதைகள் சொல்லி இருக்கிறார்! ஆனந்தத்தில் தாத்தா கை கூப்பி நின்றார்.நேருஜியும் அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் கை கூப்பி நமஸ்தே என்றார்.தாத்தாவிற்கு மிக அருகில் வந்து புன்னகைத்தார்.எப்போதும் போல் தாத்தா,கம்பீரமாக வெள்ளை பஞ்சகச்சம்,ஷர்ட், அங்கவஸ்திரம் என்று ஒரு மரியாதைக்குரிய தோற்றத்தில் இருந்தார். யாரோ ஒரு பெரியவர்,அவருக்கு ஒரு மலர் செண்டு கொடுக்க, பண்டிட்ஜி அதில் இருந்த ரோஜாக்களை எடுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்து கன்னத்தை தட்டினார்.எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது. ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு மீண்டும் காரில் ஏறினார்.
தாத்தாவிற்கு படபடப்பு அடங்க வெகு நேரம் பிடித்தது. எனக்கும்தான்.வழியெல்லாம் அவரைப்பற்றி பேசிக்கொண்டே வந்தார்.வீட்டிற்கு சென்றதும் ஒரு குட்டி ப்ரவசனமே நடத்தினார்.அம்மாவும் பாட்டியும் ஆச்சரியப்பட்டார்கள்.அவர்களால் நம்பமுடியவில்லை.ஆனால் என் கையில் இருந்த ரோஜாவே சாட்சி. அந்த அழகான சிவப்பு ரோஜாவை,சாச்சா நேருவின் கைகளால் வாங்கியதை, என் தோழிகளுக்கு காட்டவேண்டும் என்று நான் துடித்துக்கொண்டிருந்தேன்.நாட்டின் பிரதம மந்திரியை, இத்தனை அருகில், கெடுபிடி இல்லாமல் பார்ப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.
அடுத்த நாளே, டெல்லிக்கு போனபின், மாரடைப்பால் அவர் காலமான செய்தி வந்தது. முதல் நாள் அவரை பார்த்த சந்தோஷம், மறு நாளே துக்கமாக மாறிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு நினைத்துப்பார்த்தால் கூட அது ஒரு சாதாரணமான விஷயமாக தோன்றவில்லை.எவ்வளவு பெருமைக்குரிய நிகழ்வு! எவ்வளவு சாதாரணமாக ஒரு பிரதம மந்திரி, மக்களுடன் கலந்து சிரித்து போனார் ! இன்று அதெல்லாம் வெறும் ஒரு கனவுதான்.