September 30 - இந்த வருடம் என் அருமை அப்பா எங்களை விட்டுப்போய் 20 வருடங்கள் ஆகிறது !அன்று என் உலகமே ஸ்தம்பித்து விட்டது போல் உணர்ந்தேன்.இரண்டு குழந்தைகளுக்கு தாயானாலும்,அப்பாவிற்கு நான் என்றுமே ஒரு குழந்தையாகத்தான் இருந்தேன்.அவர் பிரிவை ஏற்றுக்கொள்ள பல வருடங்கள் பிடித்தன.அவர் சாயலில் யாரைப்பார்த்தாலும் இது நம் அப்பாவாக இருக்கக்கூடும் என்று ஒரு முட்டாள்தனமான நம்பிக்கையோடு பார்ப்பேன்.அமுதசுரபி பத்திரிகையில்,ஆசிரியர் கேட்டுக்கொண்டதின் பேரில்"மறக்க முடியாத அப்பா"என்ற தலைப்பில் 2006ல் என் கட்டுரை பிரசுரமாகியது.அந்த கட்டுரை இதோ. - ...........
என் தந்தை திரு.பி.சு.கைலாசம் பல சிறுகதைகளும் நாவல்களும் எழுதியவர்.இலக்கியப்பரிசுகளும் பெற்றவர்.காலஞ்சென்ற ஜெயரதன் போன்ற பல எழுத்தாளர்கள் என் அப்பாவின் நண்பர்களாக இருந்தார்கள்.என் அப்பாவின் எழுத்து தி.ஜானகிராமனின் எழுத்துக்கு நிகராக உள்ளது என்று சிலர் பாராட்டியதுண்டு.அதிகம் எழுதியதில்லை என்றாலும் எழுதியதையெல்லாம் சிறப்பாகவே எழுதினார்.இவரது சிறுகதை ஒன்றால் கவரப்பட்டு,பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஒரு விசேஷ பரிசளித்தார்.
என் அப்பாவைப்பற்றிய நினைவுகள் எனக்குள் மிக,மிகப்பசுமையாக உள்ளது.காலம் செல்லச்செல்ல நினைவுகள் மங்கும் என்பார்கள்.ஆனால் கால ஓட்டத்தில் என் அப்பா நினைவுகள் என்னிடம் அதிகரிக்கின்றதே தவிரக் குறையவில்லை.என்ன செய்வேன்!என் மேல் அத்தனை அன்பு செலுத்தியவர் என் அப்பா.
அப்பா ஒரு பெரும்படிப்பாளி.எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார்.எல்லா விதமான ஆங்கில,தமிழ் புத்தகங்கள் என்று,ஒரே சமயத்தில் மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பார்.தன கருத்துகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு விவாதிப்பார்.விவாதங்கள் காரசாரமாக நடைபெறும்.நான் வியப்போடு அந்த விவாதங்களைச் செவிமடுப்பேன்.
அப்பாவின் நண்பர்கள் எல்லோரும் நிறையப்படிப்பவர்கள்.அப்பா பேச்சில் ஒரு தனி சுவாரஸ்யம் இருக்கும்.கேட்கக் கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றும்.பெரிய பதவியில் இருந்தும்,எல்லோரையும் அன்பாக,மதிப்புடன் நடத்துவார்.யாரையும் ஒரு சிறிதும் கௌரவக்குறைவாக நடத்திவிட மாட்டார்.மனிதர்களை அவர்கள் மனிதர்கள் என்ற அளவில் கௌரவிப்பது மிக முக்கியம் என்பார். என் இரு சகோதரர்களும், நானும் புத்தகங்களிடையே வளர்ந்தவர்கள்.எங்களைச் சுற்றிலும் எப்போதும் புத்தகங்கள் தான் இருந்தன.என்னிடம் எப்போதும் பாசத்தைப் பொழியும் அப்பா, பூஜை செய்யும் அம்மாவிற்காக,தோட்டத்திலிருந்து சிரத்தையாக பவழமல்லிப் பூக்கள் பறித்துவரும் அப்பா,உள்ளூரிலேயே எனக்கு மாப்பிள்ளை பார்த்து,கல்யாணம் முடிந்து புக்ககத்தில் கொண்டுவிடும்போது என்னைப் பிரிய மனமில்லாமல் அழுத அப்பா,மாப்பிள்ளைக்கு எப்போதுமே மாமனாராக இல்லாமல் ஒரு நல்ல நண்பராக இருந்த அப்பா,தன் எல்லா பேரக் குழந்தைகளுடனும் தானும் குழந்தையாக விளையாடி மகிழ்ந்த அப்பா,வடக்கேயிருந்து விடுமுறைக்கு குழந்தைகளுடன் நான் வரும் போது ஸ்டேஷனில் பரவசத்துடன் கட்டியணைத்துக் கொள்ளும் அப்பா,பிறகு நான் சென்னையிலேயே குடி வந்த பிறகு தினமும் என்னைப் பார்க்க வேண்டும் என்று 2 கிலோமீட்டர் நடந்து வந்த அப்பா,எனக்கு ஏதாவது ஒன்று என்றால் கண்கலங்கும் அப்பா.....இப்படி அப்பாவின் பாசத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அப்பா என்றுமே என்னுடைய அந்தரங்க ஆலோசகராக இருந்தார்.ஆனால் திடீரென்று என்னுடைய 42வது வயதில்,நானும் என் தம்பிகளும் அவர் கையைப் பிடித்துக் கொண்டிருக்க,காயத்ரி மந்திரம் சொல்லியபடியே அப்பா எங்களை விட்டுப் பிரிந்தார்.
பத்து வருடங்கள் ஆயிற்று அப்பா போய்.ஆனால் நாட்கள் ஆக ஆக அப்பா நினைவுகள் மறுபடி மறுபடி வந்துகொண்டே இருக்கின்றன.அப்பாவின் பிரிவை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.அவர் நினைவு,இதோ இதை எழுதும் இப்போதும் என் கண்களைக் குளமாக்கி விடுகின்றது.அவர் என்றும், என்றென்றும் எங்களால் மறக்க முடியாத அப்பா தான்.