சமீபத்தில் நாங்கள் 3நாட்கள் கோவா சென்றிருந்தோம்.மிக அழகான,பச்சை பசேலென ஒரு சுற்றுலா இடம்.நேர்த்தியான சாலைகள்.படாடோபம் இல்லாத, அமைதியாக வாழும் மக்கள்.அதிகமாக கடல் உணவும்,மது பானமும் தான் இவர்கள் உணவில் பிரதான இடம் வகிக்கிறது .
கோவாவில் முக்கியமாக கவனித்த ஒன்று, அங்குள்ள தெரு நாய்கள் தான். எங்கும் நாய்கள் மயம்!கோவாவை நாய்களின் தலை நகரம் என்று கூட அழைக்கலாம்.முதல் நாள் கலையில், கணவரும் நானும் வாக்கிங் செல்ல புறப்பட்டோம்.சற்று தூரத்தில் எங்கிருந்தோ தட, தடவென்று இரண்டு மூன்று நாய்கள் எங்களை நோக்கி வேகமாக ஓடி வந்தன.நாங்கள் பயத்தில் உறைந்து நிற்க,நாய்கள் எங்கள் பின்னால் வந்த இரண்டு பன்றிகளை பார்த்து குறைக்க,பன்றிகள் எங்களை நோக்கி ஓடிவர,எடுத்தோமே ஒரு ஓட்டம்.பி டி உஷாவை கூட தோற்கடித்திருப்போம்!என்னை விட என் கணவருக்கு நாய்களைக்கண்டாலே அலர்ஜி,பயம்!சரி எதிர் திசையில் செல்லலாம் என்று திரும்பினால்,பக்கத்து ஓடையிலிருந்து வள், வள் என்று உறுமும் சத்தம். பீதியில் கூர்ந்து கவனித்தோம்.ஒரு பெரிய கருப்பு நாய் எங்களை முறைத்து உறுமியது.எப்போது நம் மீது பாயுமோ என்று பயந்து திரும்பிவிட்டோம். அத்துடன் எங்கள் வாக்கிங் ப்ரோக்ராம்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தோம் .
அடுத்தது பீச்.2,3 பீச்சுக்கு போனோம்.கோவாவில் பீச்சில் வெளிநாட்டார்களின் ஆதிக்கம் தான். வெயிலிலேயே படுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.பெரிதும் சிறிதுமாக ஏகப்பட்ட நாய்கள் அலைந்து கொண்டு இருந்தன.போதாக்குறைக்கு சில வெள்ளைக்காரர்கள், அவைகளை அருகில் அழைத்து தட்டிக்கொடுத்தார்கள்.அழுக்கு நாய்களும் அவர்கள் மடியில் படுத்து உருண்டன.நமக்குத்தான் அருவருப்பாக இருந்தது.இயற்கையை ரசிப்பதைவிட,ராமநாமம் சொல்வது போல் அடிக்கடி உஷ், உஷ் என்று நாய்களை துரத்துவதே பெரிய பொழுதுபோக்காகி விட்டது.நம் நாட்டில் இவ்வளவு இயற்கை அழகு இருந்தும்,அதை ஏன் பேணிக்காக்கமுடியவில்லை என்று சிந்திக்க தோன்றியது.இதை விட வியக்க வைத்த விஷயம்,விமானம் புறப்படும் போது runwayல் 2 நாய்கள் ஓடிக்கொண்டு இருந்தன .
என் கணவரை நாய்கள் துரத்திய பல அனுபவங்கள் உண்டு.டெல்லியில் நாங்கள் இருந்தபோது,ஆபிசிலிருந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் வருவார்.அந்த சமயம் தான் தெரு இருட்டில் நாய்கள் அட்டகாசம் செய்து கொண்டிருக்கும்.மாடிப்படியில் கூட பல சமயம் படுத்துக்கொண்டிருக்கும். அப்போதெல்லாம்,உடம்பு வெடவெடக்க,தாழ்ந்த குரலில் மிகவும் அன்பாக என்னையோ,மாமியாரையோ கீழே இருந்து கூப்பிடுவார்.நாய் தன் குரல் கேட்டு தன் மீது பாய்ந்துவிடுமோ என்று உள்ளூர பயம்.கூடவே எங்கள் மீது எரிச்சல்,சட்டென்று கதவை திறக்காததற்க்கு!ஸ்கூட்டரில் போகும்போது கேட்கவே வேண்டாம்.அடிக்கடி தெரு நாய்கள்,காரணமே இல்லாமல் பின்னாடியே துரத்திக்கொண்டு ஓடும்.இவர் படு வேகமாக அவைகளை சபித்துக்கொண்டே போவார்.எங்கேயாவது மோதி விடப்போகிறாரே என்று கவலைப்படுவோம்.இது அடிக்கடி நடந்த கண் கொள்ளா காட்சி .
பல நண்பர்கள்,உறவுக்காரர்கள் வீட்டிற்கு இவர் செல்ல மிகவும் தயங்குவார்.காரணம் அவர்கள் நாய்கள் வளர்ப்பதுதான்.இதில் அதிசயம் என்னவென்றால் நாய்கள் என்றாலே வெகுதூரம் ஓடும் இந்த தாத்தாவிற்கு, நாய்கள் மீது அபார மோகம் கொண்ட 3 வயது குட்டி பேத்தி !அமெரிக்காவில் தினம் தினம் பல நாய்களை கொஞ்சி மகிழ்கிறாள் !